COVID – 19ஐ கோவித்துக்கொண்டேன் !!!
அழகான சித்திரம் போல உன் உருவம்!
அதில் ஏன் அலங்கோலமான விகாரம்!
ஆளப்பிறந்தவர் நாம் உலகில் அதிவிவேகம்!
ஆட்டிவைத்து விட்டது உன் அதிவேகம்!
தூரிகை பிடித்து நாம் வரைந்த ஓவியம் இல்லை!
தூரமாக்கி சமுதாயத்திற்க்கு நீ வைத்தாய் எல்லை!
துடக்குப்போல எம்மை முடக்கிவிட்டு!
துல்லியமாய் நுழைகிறாய் எம்மைத் தொட்டு!
சிகரத்தை சிரம் குனிய வைத்தாய்!
கட்டி அணைத்தவரை
கரம் கூப்பவைத்தாய்!
தரம் பார்த்தவரை தவிடு பொடியாக்கினாய்!
வரம்வேண்டிய வல்லருசுகளை
வாய்பிதுங்க வைத்தாய்!
விஞ்ஞானிகள் விழிபிதுங்க!
மெய்ஞ்ஞானிகள் மெய்நடுங்க!
அஞ்ஞானம் அலறி ஓட!
பஞ்சாய் பறக்கிறது பரிதாப உயிர்களெல்லாம்!
உயிர்கள் அழகென்றேன்!
உலகம் பெரிதென்றேன்!
உனக்கும் எனக்கும் இடைவெளி என்றேன்!
உருவமேயில்லா நீ புரியவைத்தாய்
உலகமே உன்கையில் என்று!