வணக்கம், மகாஜனா 89 O/L மாணவர்களின் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. 1979 ஆம் வருடத்தில் பாலர் வகுப்பில் தமது பாடசாலை வாழ்க்கையை ஆரம்பித்து (மகாஜனக்கல்லூரியில்) 1989 க.பொ. த சாதாரண தர பரீட்சை வரையிலும் ஒன்றாக கல்விகற்ற மாணவ மாணவிகளின் ஒண்றிணைப்பே இந்த இணையத்தளம். இந்த காலப்பகுதிகளில் (79-89) பல மாணவ மாணவிகள் அரிவரியில் கல்வியை மகாஜனக்கல்லூரியில் ஆரம்பித்து தவிர்க்க முடியாத காரணங்களினாலும் போர்ச் சூழலின் காரணமாகவும் வேறு பாடசாலைகளுக்கும், இடம் பெயர்வுகளினால் வெவ்வேறு மாவட்டங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று தமது கல்வியை தொடந்தவ ர்களும் , அத்தோடு இலங்கையின் கல்விமுறையில் ஏற்ப்பட்டமாற்றங்களினால் மகாஜனக்கல்லூரிக்கு அண்மித்த பாடசாலைகளில் இருந்து ஆண்டு 6இற்கு மேல் பாடசாலையில் சேர்ந்து எம்மோடு ஒன்றாக கல்விகற்ற ஏனைய மாணவ மாணவிகளும், இன்று வரையிலும் தம்முடைய பள்ளி சிநேகிதத்தை தொடர்ந்து வருகின்றார்கள். இன்று உலகின் எப்பக்கத்திலும் உள்ள நண்பர்களுடன் இன்றை நவீன தொழில்நுட்ப வசதிகளின் அனுகூலத்தால் சமூக தொலைத் தொடர்பு சாதனங்களின் (facebook, whatsapp, viber)  ஊடாக   குழு அமைத்து தொடர்புகளை நீடித்துக்கொள்கின்றோம். இன்னும் எம்முடன் 79-89 காலப்பகுதிகளில் கல்விகற்ற மாணவ நண்பர்களையும் தேடிவருகின்றோம். அந்த பசுமையான இனிய நினைவுகளை என்றும் நினைவில் சுமந்து.

முதற்க்கண் எம்மோடு கல்விகற்று ஈழ விடுதலைக்காய் தம்முயிரை அர்ப்பணித்த அனைத்து மாவீரர்களுக்கும் சிரம் தாழ்த்தி வணங்கி நிற்கின்றோம்.  மேலும்   போர் மற்றும்   இயற்க்கை  அநர்த்தத்தினாலும் எம்மை விட்டு பிரிந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எமது அஞ்சலிகள். மற்றும் எமக்கு கல்வி ஊட்டி வளர்த்து இறைவனடி சேர்ந்த ஆசிரியர்கள் அதிபர்களுக்கும் எமது அஞ்சலிகள்.

இந்த இணையத்தினூடாக எமது  நண்பர்களில் பல்வேறு ஆக்கங்களை வெளிப்படுத்தவும் இந்த மகாஜனா 89 O/L இன் மாணவ மாணவிகளை ஒன்றிணைக்கவும் செயல்படுத்துவோம்.

 

 

College News…

Click on the College crest to view school news




பாடசாலை நாட்களில் காலையும் மாலையும் ஒலிபெருக்கி ஊடாக ஒலிக்கும் அந்த இனிய குரல்கள் ஞாபகம் இருக்கின்றதா? உங்களுக்காக அந்த குயில்களில் ஒன்று இசைத்த கல்லூரி கீதம்.