வாடும் வயது
வாழும் மனசு !!!
விடியலில் எழிலைத் தேடி
விம்பத்தில் வயதைத்தேடி
சுருக்கங்கள் சிரிக்க
நரைகள் தளிர்க்க
உடல்கள் பருக்க
விழிகள் விசும்ப
மனம் மட்டும்
இப்போ விரிந்த மொட்டுப் போல….
அள்ளி வார முடி ஏது
கிள்ளி எடுத்து சரி செய்து
Salt and pepper ஐ
style ஆக்கி
தச ஆண்டுகள் போக்கி
அசல் வெளுக்க
அரிதாரம் அணைத்து
Brand ஐப் பார்த்து
Trend க்குள் நுழைந்து
30 ஐப் பார்த்து கண்சிமிட்டி
60 ஐப் பார்த்தது ஆறுதல்
அடையும் தருணம் ….
முடியும் வரை நடந்து
முடியாவிட்டாலும் வளைந்து
Calorie பார்த்து
Kilo குறைத்து
Slim fit தடவிப்பார்த்து
XL க்குள் நுழைந்து
தொப்பை குப்பையாய் நீட்ட
தயங்காமல் உள்ளிளுத்து
Cat walk போக எண்ணி
Motion walk போகும் காலம் ….
வஞ்சகப் பொய் வயசுக்குச் சொல்லி
காலத்தை கஞ்சத்தனமாய் ஓட்டி
அச்சம் தவிர்த்து ஆயுள் நீட்டி
கொஞ்சும் மைனா போல
பஞ்சாய் பறக்கையில்
நெஞ்சம் நிறைந்து
விஞ்சிய வீரத்தோடு
கெஞ்சலாய் உதடு முணுமுணுத்தது
Age is just a number !!!