வண்ண வண்ண ஆசைகள்..!!!

காற்றின் முகவரி அறிந்திட ஆசை!
கடிகாரத்தின் முள்ளை நிறுத்தி வைக்க ஆசை !

முகிலின் மேல் அழகாக நடக்க ஆசை!
முப்பொழுதும் உனை நினைத்திட ஆசை !

நிலவைக் கையில் பிடித்து விளையாட ஆசை !
நிழலைப் பின் தொடர்ந்து பிடிக்க ஆசை!

கொட்டும் மழையில் நனைந்திட ஆசை!
கொடியவர்கள் எல்லாம் நல்லவர்களாக மாற ஆசை !

பிரிவே இல்லாத உறவைக்காண ஆசை!
பிறக்கும் குழந்தையை புனிதனாக உருவாக்க ஆசை !

மறுபிறப்பினை அறிந்திட ஆசை!
மரணம் என்பதை மறந்திட ஆசை!

கன்னக்குழியில் கப்பல் ஓட்ட ஆசை!
கடல் அலையைக் கைகளால் அள்ள ஆசை !

மணல் வீடுகட்டி குடிபோக ஆசை!
மான் போல துள்ளி ஓட ஆசை!

அம்மா கையால் சுடு சோறு உண்ண ஆசை!
அப்பா தோள் மேலே ஊர்வலம் வர ஆசை !

கனவுகள் எல்லாம் நிஜங்களாக ஆசை !
கடந்து போன நாட்களை மீண்டும் காண ஆசை !

தமிழை முதன் மொழி ஆக்கிட ஆசை !
தமிழருக்கு என்று ஒரு நாடு உருவாக ஆசை !

யாரும் இல்லாத தீவில் குடியிருக்க ஆசை !
யானை வாலைப் பிடித்து விளையாட ஆசை !

பறக்கும் விமானத்தைத் தொட்டுப் பார்க்க ஆசை !
பாரதியாரின் மீசையை முறுக்கி விட ஆசை!

கள்ள மாங்காய் பறித்து உண்ண ஆசை!
கட்டாந்தரையில் படுத்துறங்க ஆசை!

நட்சத்திரங்களைக் கோர்த்து மாலையாக்க ஆசை!
நடுநிசியில் தனியே நடந்து வர ஆசை !

விழிதிறந்து உறங்கிட ஆசை !
விழிமூடும் போதும் விந்தைகள் பல புரிந்திட ஆசை !

ஐல்லிக்கட்டுக் காளையை அடக்கிட ஆசை !
ஜெகம் எங்கும் அமைதி நிலவிட ஆசை!

எல்லோர் மனதையும் புரிந்திட ஆசை!
ஏழைகள் இல்லாத உலகம் படைக்க ஆசை!

மொட்டு மலரும் போது முத்தமிட ஆசை !
புல் நுனி நீரில் முகம் கழுவ ஆசை !

துவிச்சக்கர வண்டியில் நிலவுக்குப் போக ஆசை !
தோல்வி வரமுதலே வெற்றி கிடைக்க ஆசை !

கூரையில் நின்று விண்வெளியைப் பார்க்க ஆசை!
கூர்வாளின் மேல் காயம் படாமல் நடக்க ஆசை!

ஆகாயத்தின் மேல் காரோட்ட ஆசை!
ஆராரோ தாய் பாடத் தூங்க ஆசை!

உலக அழகியாய் ஒரு நாள் வாழ ஆசை!
உருளும் உலகத்தை விரலால் சுற்ற ஆசை !

நண்பர்களுக்கு என்று ஒரு உலகம் உருவாக ஆசை!
நல்ல நட்பு இறிதி வரை தொடர ஆசை!

மீண்டும் குழந்தையைப் போல ஆக ஆசை !
புதியதோர் உலகத்தின் முதல் குழந்தையையாகப் பிறக்க பேராசை!

***********************************************************************************************

அழியாத  நினைவில்..
உறங்காத விழிகள்…

அழியாத  நினைவில்..
உறங்காத விழிகள்…

மறையாத நிலவு…
விடியாத இரவு…

உறங்காத நெஞ்சம்…
உதிக்காத சூரியன்…

மலராத மொட்டு…
கூவாத குயில்கள்…

தூவாத வானம்…
விளையாத நிலம்…

காய்க்காத மரம்…
பூக்காத வாழை…

துளிராத நெல்லு…
எரியாத அடுப்பு…

தாங்காத பசி…
நிறையாத வயிறு…

குறையாத வறுமை…
மீளாத துயரம்…

பார்க்காத சோகம்…
விரிக்காத கடிதம்…

திறக்காத மனசு…
குறையாத காதல்…

மாறாத தனிமை…
தாங்காத சோகம்…

செல்லாத காசு…
தாங்காத கொடுமை…

சொல்லாத ஆசை…
மீட்டாத வீணை…

துடிக்காத நெஞ்சம்…
அணையாத நினைவு…

தாண்டாத படிகள்…
அழியாத கோலம்…

தூண்டாத விளக்கு…
மறையாத சூரியன்…

இணையாத நெஞ்சம்…
மாறாத வலிகள்…

வாழாத வாழ்க்கை…
முடிக்காத கவிதை…!!

College News…
Click on the College crest to view school news




பாடசாலை நாட்களில் காலையும் மாலையும் ஒலிபெருக்கி ஊடாக ஒலிக்கும் அந்த இனிய குரல்கள் ஞாபகம் இருக்கின்றதா? உங்களுக்காக அந்த குயில்களில் ஒன்று இசைத்த கல்லூரி கீதம்.