நட்பின் நினைவில்..!

அழகான ஓர் ஆரம்பம் 
அன்பான ஓர் தொடர்பு

ஆழம் அறியாத தொடக்கம் 
ஆயிரம் காலம் தொடரும் உறவு

இளகிய இரண்டு நெஞ்சின்
இதமான புரிதலின் வெற்றி

ஈன்றார்க்கு ஈடான ஈர்ப்பு
ஈதலின் இலக்கணம் நட்பு

உன்னை அறிந்த ஓர் உயிர் 
உயிர் தரத் துணிந்த உயிர்

உயர்வில் பொறாமை உறவுக்கு
உயர்வில் பெருமை நட்புக்கு

உரிமைக்கு ஆயிரம் உறவுகள் 
உண்மைக்கு நட்பு மட்டுமே

ஊரெல்லாம் தேடிக் காணாத
ஊக்கம் தரும் தோழமை

எண்ணில் அடங்காத சந்திப்பு
எத்தனை என்றாலும் சலிக்காது

ஏக்கம் என்றும் இருக்கும்
ஏங்கும் இதயங்களின் பிரிவில்

ஏற்றத்தாழ்வு ஏற்ப்படினும்
ஏமாற்றம் அடையாத உறவு

ஐயம் என்பது இல்லை
ஐவர் சேர்ந்து நடக்கையில்

ஒற்றுமை எப்போதும் எங்களுக்கு
ஒத்துப்போவோம் போட்டியிலும்

ஓர் தாய் வயிற்றுப்பிள்ளையாய்
ஓடித்திரிந்த நாட்க்கள் எத்தனை

கண்ணியம் என்பது கடமை
காதலிலும் உனக்கு கடவுள் போல

கூடிப்பிறக்காத சொந்தம்
கூப்பிட ஓடி வரும் சொந்தம்

சத்தியம் செய்ய தேவையில்லை
சத்துருக்கனாய் நம்பிடுவான்

தன் சோகம் சொல்ல ஒரு தோழ்
தன் பலம் சேர்க்க கிடைத்த நட்பு

தடுமாறும் போது தாங்கிடுவான்
தடம் மாறும் போது தடுத்திடுவான்

தரணியில் வாழும் காலம் வரை
தளராமல் தொடரணும் நட்பு

நம்மை நேசிக்கும் இதயம்
நம் பிணி துடைக்கும் கைகள்

பருவங்கள் மாறினால் முதுமை
பள்ளித்தோழன் என்றும் இளமை

மனம் நிறைந்த நட்பு
மணம் வீசும் வாழ்க்கையில்

வாசலில் வந்து கூட்டிப் போகும்
வாழும் காலமெலாம் கூட வரும்

வெறுமையிலும் நீ வேண்டும் 
வெற்றியிலும் நீ வேண்டும்

வழி மாறிப் பிரியும் பாதை
விழியோரம் கண்ணீர் வரைந்த பாதை !!

College News…
Click on the College crest to view school news




பாடசாலை நாட்களில் காலையும் மாலையும் ஒலிபெருக்கி ஊடாக ஒலிக்கும் அந்த இனிய குரல்கள் ஞாபகம் இருக்கின்றதா? உங்களுக்காக அந்த குயில்களில் ஒன்று இசைத்த கல்லூரி கீதம்.