50th Celebration

மகாஜனா தெரியுது பார் !

 

தெரியுது பார் மகாஜனா !

அம்பனை வயல் வாசல் திறக்க

வானைக்காற்று தழுவிச்செல்ல

பலம் கொண்ட  பனையும்

தலை  விரித்த ஆலும்  அணி  வகுத்து நிற்க….

 

வெண்முகில் கூட்டம்  வந்து வினையாடி

இரு வழி விட்டது போல்

அன்னக்குஞ்சுகள்  நுழைவது போல்

பிள்ளைக்குஞ்சுகள் நுழையுது பார்……

 

 

ஆறடி உயரத்தில் துனரயப்பா

இரு கை  நீட்டி வாவென்று அழைக்க

தந்தையை கண்ட பிள்ளை போல்

தாவி பயந்து கட்டி அணைக்குது

 

பூக்கள் கூட்டம் வட்டமிட

தேனீர்க்கூட்டம் பாடிவர

கை விரிந்த வாழை முன்னின்று வாழ்த்தி விட

உருகுது உள்ளம் சாதனை படைக்க ….

 

நீ சபதமிட்டு உறுதிகொண்டால்

நித்தம் வெற்றி நமக்கே என்று

வெல்லுக மகாஜன முழக்கமிட்டு பறக்குது பார்

மாண்புகழ் கொண்ட மாவெண்ணிற கொடி…….

 

சிப்பிக்குள் வந்த முத்துப்போல்

கருடன் நிறம் கொண்ட முகம் போல்

கலைமகள் இருக்கும் இடம் போல்

உலக அதிசயத்தில் ஒன்று போல்……

 

உயர்ந்து நிற்கும் மகாஜனா

நெற்றிப்பொட்டு இட்டது போல்

அறிவுச்சுடர் ஒளிர அழகு தாமரை மலர

அழகாய் தெரியும் உனை  நீ அறி.

error: Content is protected !!