தாயகத்தில் 50ஆவது பிறந்த தின கொண்டாட்டங்களின் 2, 3 ஆம் நாள் நிகழ்வுகள் சிகிரியா நோக்கிய பயணமாக ஆரம்பித்து மிகிந்தலையில் இளைப்பாறி நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து வீதி ஓரத்தில் காலை உணவாக பருப்பு குழம்பு செய்து பாணுடன் உணவருந்தி மகிழ்ந்தோம். மீண்டும் சிகிரியா அடைந்த பொது மாலைப்பொழுதாகி விட்டதால் சிகிரியா குன்றில் ஏறுவது இயலாத காரியமாதலால் மீண்டும் ஹோட்டல் சென்றடைந்து அங்கு நண்பர்கள் நண்பிகள் மாலைப்பொழுதை இசை நிகழ்ச்சிகளுடன் ஆடல் பாடல் என கொண்டாடி ஒன்றாக உணவருந்தி மகிழ்ந்தோம்,
மறுநாள் கண்டி நோக்கி பயணித்து அங்கு தலதா மாளிகை எனும் புத்தபிரானின் ஆலயத்தை தரிசித்து கண்டு கழித்தும் பின்னர் பேராதெனிய பூங்காவில் மதிய உணவுடன் நண்பர்கள் நண்பிகள் குடும்பங்களுடன் கூடி மகிழ்ந்தனர். பின்னர் இரவு மீண்டும் யாழ் நோக்கி பயணித்து இரண்டு நாள் நிகழ்வுகளும் செவ்வனே நிறைவு பெற்றது. இவ்விரு நாள் நிகழ்வுகளும் இனிதே நடந்தேற உதவிய அனைத்து புலம் பெயர் நண்பர்கள் நண்பிகளுக்கும், நேர்த்தியான முறையில் திட்டமிட்டு வழிநடாத்திய அனைத்து தாயகத்து நண்பர்கள் நண்பிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
2ஆம் 3ஆம் நாள் நிகழ்வுகளில் இருந்து எமக்கு கிடைக்கப்பெற்ற காடசிகளில் இருந்து சில…….