என் மாதா மகாஜனாவே

ஏறி வரும் கதிரவன் அந்த வானத்திற்கு அழகு

ஏழுந்து வரும் கடல்  அலைகள் அந்த கடலுக்கு அழகு

வளைந்து நிற்கும் வானவில் அந்த நிறத்திற்கு அழகு

நீ கற்ற கல்வி மகாஜனா அது உனக்கு அழகு ………

 

தெல்லிப்பளைக்கு நீ தேடி வந்த சொத்து

அம்பனைக்கோ நித்தம் தெரிந்துடுவாய்

இதழ் விரிந்த தாமரை மேல்

இருக்கின்ற கலைவாணி போல்

 

நல் வருகை சொல்லிடுவாய்

வெண்பழுப்பு  கொடியுடன்

மெல்ல வாய்    திறப்பாய்

உனை  நீ அறி என்று

திருக்குறள் இருக்கும் வரை

திருவள்ளுவர் இருப்பார்

மகாஜன இருக்கும் வரை

துரையப்பா ஜெயரட்ணம் இருப்பார்கள் …….

 

அறுகு பாய் விரித்த மைதானமும்

அருகில் ஆடுகின்ற ஆனந்த நடராஜரும்

ஒருகரையில்  சவுக்குமரம்

மறுகரையோ மாமரங்கள்

மாங்கனிகள் பழுத்தது இல்லை

பாவம்  பாதியிலே கல் ஏறிகள் வாங்கிவிடும்

அடிக்கின்ற மணிக்கு நிழல் கொடுக்கும் பலா மரமும்

ஆடி மாத காற்றில் ஆனந்தம் கொண்டிடுவாய் ……

 

நீ வைத்தக்கால் மறவாத வகுப்பறையும்

நீ ஆண்டுக்கு ஒரு முறை ஏறியதும்

நீ கற்ற கல்வி விட்டபிழை விடாதபிழை

நீ படித்த மகாஜனா முழுநிலவாக தெரியுமடா

நீ அதை மூச்சுவிட்டு பார்த்திடுவாய் ………

 

பெற்றதாய் பெருமைகொண்டாள் உன்னை கண்ட போது

கல்வி கற்ற தாய் பெருமை கொண்டாள் நீ வந்த போது

அமிர்தம் உண்டால் ஆயுள் அதிகம்

மகாஜனாவில் படித்ததால் அறிவு அதிகம்

வெல்க மகாஜனா வெல்க

உலக உருண்டையில் ஒலிக்கட்டும் உன்புகழ்      

 

College News…
Click on the College crest to view school news




பாடசாலை நாட்களில் காலையும் மாலையும் ஒலிபெருக்கி ஊடாக ஒலிக்கும் அந்த இனிய குரல்கள் ஞாபகம் இருக்கின்றதா? உங்களுக்காக அந்த குயில்களில் ஒன்று இசைத்த கல்லூரி கீதம்.