GPL – “Grasshoppers Premier League”

மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர்களான சங்கர் மற்றும் றோகன் ஆகியோரின் ஞாபகார்த்தமாக Grasshoppers விளையாட்டுக் கழகத்தினரால் நடாத்தப்படும் ஒரு நாள் Cricket திருவிழா.

மறைந்த சங்கர் மகாஜனாவின் Cricket பயிற்றுனர், மறைந்த றோகான் மகாஜனாவின் சகல விளையாட்டுத் துறைகளின் பயிற்றுனர் மட்டுமல்ல, யாழ்மாவட்ட, கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரியாகப் பணியாற்றியவர். GPL Cricket சுற்றுப்போட்டி இந்தியாவில் நடைபெறும் IPL வடிவமைப்பில் தமிழ் பிரதேச Cricket வீரர்களின் திறனை தொழில் முறையாக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டது. 6 அணிகள் இதில் பங்கு கொள்கின்றன. ஆறு அணிகளுக்கும் ஒவ்வொரு அணி உரிமையாளர்கள், ஒவ்வொரு பயிற்றுனர்கள், ஒவ்வொரு முகாமையாளர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் தமது அணிக்குத் தேவையான, விருப்பமான, திறமையான வீரர்களை ஏல முறைப்படி ஏனைய அணிகளோடு ஏட்டிக்குப் போட்டியாக ஏலம் கூறி வீரர்களுக்கு பணம் செலுத்தி தமது அணிகளுக்கு வீரர்களைத் தெரிவு செய்துகொள்வார்கள்.

2016 ல் முதல் முறையாக இந்த தெரிவு முறை அறிமுகப் படுத்தப்பட்டதையால் ஏலத்தின் மூலம் வீரரகளுக்கு செலுத்தப்பட்ட பணம் முழுவதையும் வீரர்களின் விருப்பத்துடன் அன்பு நெறி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டில் 2017ல் வீரர்களின் ஏலத்தொகை அந்தந்த வீரர்களுக்கே வழங்கப்பட்டது. இருப்பினும் எல்லா வீரர்களும் தமக்குக் கிடைத்த ஏலத்தொகையில் 25% தர்மத்திற்குக் கொடுக்க முன்வந்து பங்களித்தனர்.

இந்த GPL Cricket சுற்றுப்போட்டி எல்லா கிரிக்கட் வீரர்களையும் ஒற்றுமையாக ஒன்றிணைக்கும் உன்னிதமான பங்கினை வகிப்பதாக பிரபலமான யாழ் கிரிக்கட் யாம்பவான்கள் கூறுகின்றனர். GPL Cricket மகாஜனாக் கல்லூரியின் பெருமைக்கு கைகொடுத்திருப்பதாக அதிபர் அவர்கள் கூறியிருக்கின்றார். இந்த GPL Cricket சுற்றுப்போட்டி எதிர்வரும் காலங்களில் மேன்மேலும் பல வளர்ச்சிகளை எட்டி நிற்கும் என்று பலரும் பாராட்டுத் தெரிவித்திருக்கின்றர்கள். 2016 ல் கல்வி கலாச்சார விளையாட்டு அலுவல்கள் அபைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து உரையாற்றுகையில் ” இதுமாதிரி ஏலமுறையில் வீரர்கள் தெரிவு எமது பிரதேசத்திலும் சாத்தியம் என்று GPL குழுமத்தினர் நிரூபித்திருக்கிறார்கள் ” என்று குறிப்பிட்டார். இந்த ஆண்டில் சிறப்பு விருந்தினராக கலந்து உரையாற்றிய முன்னைநாள் இலங்கைத் தேசிய அணி வீரர் பிரதீப் ஜெயப்பிரகாஸ் உரையாற்றுகையில் ” இழம் கிரிக்கட் வீரர்களுக்கு பெரிய உற்சாகம் கொடுக்கக்கூடிய வாய்ப்பாக GPL Cricket அமையும் ” என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு ஆண்டிலும் நடாத்தத் திட்டமிட்டுள்ள இந்த GPL Cricket ஒவ்வொரு ஆண்டிலும் புதிய வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் எட்டி நிற்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

விழிப்புலன் இழந்தோருக்கு 2017 GPL ல் ஆதரவுக்கரம்.

விழிப்புலன் இழந்தோர் சங்கத்திற்கு கிறாஸ்கொப்பர்ஸ் பிறிமியர் லீக் உதவிக்கரம் நீட்டி வரவேற்றுள்ளது. GPL கிரிக்கெட் போட்டியின் போது அவர்களுக்கும் ஒரு காட்சிப்போட்டியை நடாத்தியதோடு, 10000 ரூபா அன்பளிப்பினையும் செய்துள்ளது.

 

College News…
Click on the College crest to view school news




பாடசாலை நாட்களில் காலையும் மாலையும் ஒலிபெருக்கி ஊடாக ஒலிக்கும் அந்த இனிய குரல்கள் ஞாபகம் இருக்கின்றதா? உங்களுக்காக அந்த குயில்களில் ஒன்று இசைத்த கல்லூரி கீதம்.